40 வயதில் புளியங்கொம்பை பிடித்திருக்கும் சிம்பு.. விரைவில் நடக்க உள்ள திருமணம்

Actor Simbu: சிம்பு தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நிலையில் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக தனது உடம்பை சரமாரியாக குறைத்து முடி மற்றும் தாடி ஆகியவற்றை வளர்த்திருக்கிறார். அதுவும் மாஸ் லுக்கில் அவர் வெளிநாட்டில் உலாவும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கிட்டதட்ட 40 வயதாகும் சிம்பு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார். அவரது தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் ஆன நிலையில் சிம்பு மட்டும் தனி மரமாக இருப்பது அவரது தந்தைக்கு மிகவும் மன வேதனை அளித்து வருகிறது. இதனால் டி ஆர் சமீபகாலமாக மிகத் தீவிரமாக சிம்புவுக்கு பெண் பார்த்து வந்தார்.

இந்த சூழலில் சிம்புக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சிம்பு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நயன்தாராவுடன் பழகி வந்தார். சில காரணங்களினால் இந்த காதல் பாதியிலேயே முடிவுற்றது. அதன் பிறகு ஹன்சிகா உடன் சிறிது காலம் சிம்பு காதலித்த நிலையில் அதுவும் கைகூடவில்லை.

இப்போது நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் இன்னும் திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் என்று சிம்புவின் குடும்பம் கேட்டுக் கொண்டதால் அவரும் திருமணத்திற்கு சம்மதித்தார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் தான் சிம்புக்கு மனைவியாக போகிறார்.

அதுவும் தொழிலதிபர் மட்டுமின்றி பைனான்சியராகவும் சிம்புவின் வருங்கால மாமனார் உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர்களின் பெயர் தற்போது வரை வெளியில் வராமல் மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அறிந்த சிம்பு ரசிகர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் லேட்டா திருமணம் செய்தாலும் லேட்டஸ்டாக சிம்பு 40 வயதில் புளியங்கொம்பாக பெரிய இடத்தில் தான் மருமகன் ஆகப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மையான செய்தி என்பது சிம்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரியவரும்.