1000 கோடி வசூலுக்கு தயாராகும் STR48.. சிம்பு கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

Simbu-STR48: கமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளிவந்து பல மாதங்கள் ஆன பிறகும் கூட எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. அதனாலேயே இப்படம் கைவிடப்பட்டதா? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் அது அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது பிப்ரவரி 2 இப்படத்திற்கான முக்கிய அப்டேட் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதை கொண்டாடுவதற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர்.

இதற்காகவே காத்திருந்த சிம்புவின் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதன்படி சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

பீரியட் படமாக உருவாகும் இப்படத்திற்காக சிம்பு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதை இயக்குனரே உறுதிப்படுத்திய நிலையில் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷனுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியது ஆகிவிட்டது. சிம்புவும் படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

இதை வைத்துப் பார்க்கும்போது படம் எதிர்பார்த்ததை விட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிகிறது. அதே போல் சிம்பு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. இந்த யூகங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாகிவிடும்.

அந்த வகையில் தமிழில் ஆயிரம் கோடி வசூலை குவிக்க போகும் முதல் படம் STR48 தான் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார் போல் சிம்புவும் ரசிகர்களுக்கு தரமான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுப்பதற்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: ஜனவரி 31 என்றவுடன் நினைவுக்கு வரும் நான்கு விஷயங்கள்.. தலைவன் சிம்பு செய்த தரமான சம்பவம்