தெரியாத்தனமா ஒரு படம் ஹிட் ஆயிட்டு, அதையே பிடித்து தொங்கும் சிம்பு.. இயக்குனர்களுக்கு போடும் கண்டிஷன்

Simbu: சிம்பு நடிப்பில் இந்த வருடத்தில் வெளிவந்த பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்குனருடன் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. அத்துடன் இப்படத்தை கமல் தயாரிக்கப் போகிறார். அந்த வகையில் நாளா பக்கமும் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்று ஹீரோயினை அலசி ஆராய்ந்தார் கமலஹாசன். அதனால் அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. அதற்கு காரணம் இன்னும் இந்த படத்திற்கு முழுமையாக கதை தயாராகவில்லை. இதற்கு இடையில் சிம்பு ஒரு பக்கம் இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டு வருகிறார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த மாநாடு படம் தெரியாத்தனமாக வெற்றி அடைந்து விட்டது.

அந்த வகையில் அப்படத்தின் பெருமையை மட்டுமே தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறார். இதற்குப் பிறகு வந்த வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல பெருசாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட் ஆகவில்லை. அதனால் பெருமை அடிக்கும் விதமாக மாநாடு படம் அப்படியாச்சு இப்படி வெற்றி கொடுத்தேன் என்று ஓவராக அலட்டிக் கொண்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஒரு படம் வெற்றி அடைந்ததால் இவருடைய சம்பளத்தை டிமாண்ட் செய்யும் அளவிற்கு காரராக நடந்து கொள்கிறார். போதாக்குறைக்கு இவர் நடிக்கக்கூடிய படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாகவும் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். அதற்கு ஏற்ற மாதிரி பெரிய ஹீரோயின்களையும் நடிக்க வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த வகையில் இவர் நடிக்கப் போகும் படங்களுக்கு குறைந்தது 20 கோடி சம்பளம் ஆவது வேண்டும் என்று கேட்டு வருகிறார். இவர் நடித்த படங்களிலேயே சமீபத்தில் பேசும் படி வெற்றி அடைந்தது மாநாடு படம். இந்த ஒரு படம் ஹிட்டானதால் இதையே பிடித்து தொங்கிக்கிட்டு இவரைத் தேடிப் போகும் இயக்குனர்கள் அனைவரையும் படாத பாடு படுத்தி எடுக்கிறார்.

ஏற்கனவே படப்பிடிப்புக்கு ஒழுங்கா வர மாட்டுகிறார், வந்தாலும் சரியாக கால்சீட் கொடுக்க மாட்டார் என்று இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் புதுசாக அதிக பட்ஜெட்டில் படம் வேண்டும், அதிக சம்பளம், பெரிய ஹீரோயின் வேண்டுமென்று அடுக்கடுக்காக கண்டிஷன் போடுவதால் இயக்குனர்கள் யாரும் இவர் பக்கம் எட்டி கூட பார்க்க விரும்பவில்லை.