மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

Actor Simbu and Manirathinam: சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்து விட்டாலே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் சிம்பு போல இளம் நடிகரை பற்றி சொல்லவே தேவையில்லை, அந்த அளவிற்கு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக பெயரை கெடுத்துக் கொண்டார். தற்போது எல்லா சேட்டைகளையும் மூட்டை முடிச்சு கட்டி நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இருந்தாலும் இவரை நம்பி ஒரு படம் எடுக்கிறது என்றால் அவ்வளவு எளிதாக கிடையாது. இன்னும் தெளிவாக சொன்னால் பாம்பு புற்றுக்குள் கையை விடுவது போல தான் மிகப்பெரிய ரிஸ்க்காக இருக்கும். அந்த அளவிற்கு சிம்புவின் அழிச்சாட்டியங்கள் இருக்கும். இருந்தாலும் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தேடிக் கொண்டுதான் போகிறார்கள்.

Also read: சிம்பு கைவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பெண் பித்து பிடித்து ஆட்டிய கெட்ட நேரத்தில் தட்டி தூக்கிய தனுஷ்

அந்த வகையில் தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இவருடைய 48வது படத்தை நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படத்திற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு முன்னதாகவே இயக்குனர் மணிரத்தினம், சிம்புவிடம் ஒரு படத்திற்கான கதையை கூறியிருக்கிறார்.

சிம்புவும் அந்த கதையை கேட்டு அவருடைய சம்மதத்தை கொடுத்து படத்தை நாம் பண்ணலாம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் சொன்னதை மறந்துவிட்டு தற்போது தனக்கென்ன என்று இவருடைய இஷ்டத்திற்கு பல சில்மிஷங்களை செய்து வருகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மணிரத்தினம் ரொம்பவே கடுப்பாகி இருந்திருக்கிறார். போதாக்குறைக்கு தற்போது சிம்பு அடர்ந்த முடியை வைத்துக்கொண்டு தாடியுடன் இயக்குனர் மணிரத்தினத்தை பார்க்க போயிருக்கிறார்.

Also read: இந்த ரெண்டு விஷயங்களால் சிம்பு பரம எதிரியாக நினைக்கும் ஹீரோ.. நயன்தாராவுடன் சேரவிடாமல் தடுத்த விஷப்பூச்சி

இதை பார்த்தவுடன் மணிரத்தினம் சிம்புவை ரிஜெக்ட் செய்து விட்டார். அதற்கு காரணம் அவர் சிம்புவிடம் கூறியிருந்த கதை கலெக்டர் கதாபாத்திரம். அதற்கு இந்த மாதிரி ஆட்டிடியூட் இருந்தால் செட்டே ஆகாது என்று வந்து சிம்புவை திருப்பி அனுப்பி விட்டார். அத்துடன் துல்கர் சல்மானை அந்த படத்திற்கு தேர்ந்தெடுத்து விட்டார்.

என்னடா இது எனக்கு வந்த சோதனை என்று தற்போது புலம்பி தவிக்கிறார் சிம்பு. ஏற்கனவே மணிரத்தினம் எந்த மாதிரியான கேரக்டர், ரூல்ஸ் எந்த அளவிற்கு ஃபாலோ பண்ணுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை தெரிந்தும் சிம்பு அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதால் இருந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.

Also read: ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு