சந்தில் சிந்து பாடிய சிவகார்த்திகேயன்.. பிசினஸ் வேற, நட்பு வேறன்னு மறுத்த கமல்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் வருகின்ற 14ஆம் வெள்ளிக்கிழமை மாவீரன் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் வானத்தை பார்க்கும் போது அவரிடம் ஒரு சக்தி கிடைக்கிறது. அதன் பிறகு எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அவ்வாறு வானத்தில் இருந்த வரும் குரலை மிஷ்கின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் இந்த குரல் கொடுப்பதற்காக ரஜினி மற்றும் கமலை படக்குழு நாடி உள்ளனர். நெல்சன் கேட்டுக் கொண்டாலும் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ரஜினி அனுமதிக்கவில்லை. இது தன்னுடைய படமாக தான் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிட்டாக கூறிவிட்டார்.

அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்தில் எப்படி ரஜினி குரல் கொடுப்பார். அடுத்ததாக கமல் பொன்னியின் செல்வன் படத்தில் குரல் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் கமலுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கமலிடம் தனது படத்தில் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கமலோ நட்பு வேறு பிசினஸ் வேறு. நான் இந்த படத்தில் பேசினால் அவ்வளவாக செட்டாகாது. ஆகையால் வேறு யாரையாவது குரல் கொடுக்க சொல் என்று கூறிவிட்டாராம்.

தானாக முன்வந்து கேட்டும் கமல் மறுத்து விட்டதால் இது சிவகார்த்திகேயனுக்கு மிகுந்த அவமானமாக போய்விட்டதாம். ஆனாலும் அவர் தயாரிப்பில் நடித்துக் கொண்டிருப்பதால் வேறு வழியில்லாமல் கமல் சொன்னதற்கு சரி என்று தலையாட்டி விட்டு வந்து விட்டாராம். இப்போது விஜய் சேதுபதியின் குரலில் மாஸாக மாவீரன் படம் உருவாகி இருக்கிறது.