விஜய் டிவியை கதறவிட்ட பராசக்தி நாயகன்.. நம்ம வீட்டு பிள்ளை இப்படி ஆப்பு வச்சுட்டாரே!

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்தியேன், விஜய் டிவியை சமீபத்தில் கதற விட்டு இருக்கிறார். விஜய் டிவியின் ஆஸ்தான பிள்ளையாக சினிமாவுக்குள் சிவகார்த்திகேயன் நுழைந்தார்.

சினிமாவில் அவர் வளர வளர விஜய் டிவியில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவரை பாராட்டி தள்ளினார்கள்.

கதறவிட்ட பராசக்தி நாயகன்

கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் விஜய் டிவி பக்கம் தலை காட்டவே இல்லை. பிஸியான நடிகர் இனி சேனல் பக்கம் வர மாட்டார் என்று தான் அவருடைய டிவி ரசிகர்களும் நினைத்தார்கள்.

அனால் அந்த விஷயத்தில் தான் சிவா தற்போது தரமான சம்பவம் பண்ணியிருக்கிறார். ஜி தமிழில் சரிகமப என்னும் குழந்தைகளுக்கான பாட்டுப்போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

இதன் இறுதி போட்டி சமீபத்தில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஏனோ தானோ என்றெல்லாம் இல்லாமல் பல நாட்களாக இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பது போல் விமர்சனம் எல்லாம் கொடுத்தார்.

அத்தோடு திவினேஷ் என்ற போட்டியாளருடன் ‘நான் ஆணையிட்டால்’ பாடலை சேர்ந்து பாடி ஆச்சரியப்படுத்தினார்.

விஜய் டிவி பக்கமே வராத இவர் ஜீ தமிழ் பக்கம் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரவைத்து நாங்கள் தான் வளர்த்து விட்டோம் என்று அறைகூவல் போட்டதால் தான் என்னவோ விஜய் டிவிக்கு கும்முடு போட்டுவிட்டார் போல பராசக்தி நாயகன்.