தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டான், சிங்கப்பாதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாக உள்ளது.
கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக டாக்டர் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்ததால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை அடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் படத்தின் டிரைலரையும் வெளியிட்டனர். டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்களே டாக்டர் படம் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம் தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருவதே ஆகும். டாக்டர் படத்தை வைத்து பீஸ்ட் படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

தற்போது வரும் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் படம் வெளியாக உள்ளதால், அனைத்து ஏரியாவிலும் திரையரங்க விற்பனை முடிவடைந்து விட்டதாம். டாக்டர் படத்திற்கு போட்டிக்கு எந்தவொரு படமும் வெளியாகாததால் சோலோவாக மிக பிரம்மாண்டமாக அனைத்து திரையரங்குகளிலும் டாக்டர் படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான செல்லம்மா வீடியோ பாடலையும் விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.