சிவகார்த்திகேயன் பிரின்ஸ் பட தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக மாவீரன் மற்றும் அயலான் படங்களில் தனது கடின உழைப்பை போட்டு உழைத்து வருகிறார். கண்டிப்பாக இந்த படங்கள் சிவகார்த்திகேயனின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
இதைத்தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு கெட்டப்பும் போட்டிருந்தார்.
மேலும் படப்பிடிப்புக்காக காஷ்மீரும் சென்று இருந்தனர். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஏழரை சனி தான் போட்டு ஆட்டுகிறதோ என்னவோ அவர் படம் தொடங்கும் போதெல்லாம் பிரச்சனையும் வெடிக்கிறது. அதேபோல் கமல் படத்திலும் பிரச்சனை தொடங்கியது.
அதாவது காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதால் ராணுவம் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவை திருப்பி அனுப்பி உள்ளனர். அவர்கள் திரும்பி கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகியும் இன்று வரை காஷ்மீரில் இவர்களை திருப்பி கூப்பிடவே இல்லையாம். இதனால் சிவகார்த்திகேயன் அப்செட்டில் உள்ளார்.
காரணம் என்னவென்றால் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தாடி வளத்துள்ளாராம். இந்த படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத சூழ்நிலையில் தாடியை இப்படியே வைக்கலாமா இல்லை எடுத்து விடலாமா என்று குழப்பத்தில் இருக்கிறாராம். இது கமல் படம் என்ற பயம் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது.
அதற்குள் வேறு படத்தில் நடித்தால் கமலின் கோபத்திற்கு உள்ளாக கூடும். ஆகையால் சிறிது காலம் பொறுப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு தற்போது சிவகார்த்திகேயன் வந்துள்ளார். இதுவே கமலைத் தவிர வேறு தயாரிப்பு நிறுவனமாக இருந்திருந்தால் சிவகார்த்திகேயன் நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.