நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் திரைப்படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பேனர் தயாரிக்கிறது. சிவா இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.
இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் சங்கரும் கலந்து கொண்டார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது என செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது இந்த படத்தின் சூட்டிங் ஒரு வாரத்திலேயே நிறுத்தப்பட்டதாக இப்போது தகவல்கள் வெளியாகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கமாகவே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அவர் மீது இருக்கும் கடன் பாக்கிகள் தான் என்கிறார்கள். இந்த படத்திற்காக அதிதிக்கு வேறு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமைந்தன. இதில் சீமராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் சன் பிக்சர்சின் திரைப்படம் ஆகும். இந்த தொடர் தோல்விகளால் சிவாவுக்கு கடன் அதிகரித்து விட்டது.
சிவாவுக்கு இப்போதைக்கு மொத்தம் 76 கோடி கடன் இருக்கிறதாம். இந்த கடனை அடைப்பதற்கு ஒவ்வொரு படத்திற்கும் 25 கோடி கொடுக்க வேண்டும் என ஒப்பந்தமாகி இருக்கிறதாம். இந்த கடனை அவர் அடைக்காமல் இருப்பதால் தான் இந்த பிரச்சனைகள் வருகிறதாம்.
இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் கடனை சிவா அடைத்து விட்டதாக சில தகவல்கள் வெளிவந்தன. மேலும் இவருக்கு இருக்கும் கடன் மற்றும் படப்பிடிப்பு நிறுத்தம் பற்றி பல உண்மைகள் வெளி தெரியாமல் இருக்கிறது.