இப்படியே போனா வேலைக்காகாது.. மீண்டும் பழைய அஸ்திரத்தை கையிலெடுத்த SJ சூர்யா

எஸ் ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது அவர் நடித்த படங்கள் தான். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த எஸ் ஜே சூர்யா வில்லன் அவதாரம் எடுத்தார். ஸ்பைடர், மெர்சல் என இந்த இரண்டு படங்களிலும் தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார்.

இதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் மாநாடு படத்திற்குப் பிறகு எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் தற்போது எங்கேயோ போய் உள்ளது.

இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் மீண்டும் படத்தை இயக்காமல் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் எஸ் ஜே சூர்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து எஸ் ஜே சூர்யா வில்லனாக காட்டி வருவதால் அவர் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தற்போது அதை மாற்றும் விதமாக எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. வெங்கட்ராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த கடமையை செய் இந்த மாதம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்த அடுத்த மாதம் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படம் ரிலீசாக உள்ளது. பொம்மை படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொம்மை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது. வில்லனாக மக்கள் மனதில் இடம் பிடித்த எஸ்ஜே சூர்யா தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.