பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுகாக மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரகுமான், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பலரும் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். இப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு ஆந்திராவுக்கு பிரமோஷன் செய்ய சென்றிருந்தது. அப்போது மணிரத்தினத்துடன் சென்றிருந்த அவரது மனைவி சுஹாசினி பொன்னியின் செல்வன் படத்தை பற்றி சில விஷயங்களை பேசி இருந்தார். ஆனால் அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
அதாவது சுஹாசினி பேசுகையில் பொன்னியின் செல்வன் படத்தின் நிறைய காட்சிகள் இந்த மண்ணில் எடுத்தது. இது உங்களுடைய படம், இதனால் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றி அடைய செய்து விட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ஒருபடி மேலாக விக்ரம் இது இந்தியர்களின் படம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெறும் பத்து நாட்கள் மட்டும் தான் இந்த படத்தின் சூட்டிங் எடுத்தோம் என்று முகத்தை சுளித்துக்கொண்டு பேசியுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் தற்போது உச்சகட்ட கடுப்பில் உள்ளனர். அதாவது தமிழரின் பெருமையை படைச்சாற்றும் விதமாக பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் தஞ்சை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் தான் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற இடங்கள் உள்ளது. சோழர்களின் பெருமையை கூறும் இந்த பொன்னியின் செல்வன் நாவலை தமிழர்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த நாவலில் அவ்வளவு சிறப்பு அம்சங்கள் உள்ளது.
ஏதோ பொன்னியின் செல்வன் படத்திற்கு ப்ரமோஷன் செய்வதாக நினைத்துக்கொண்டு சுஹாசினி மற்றும் விக்ரம் இருவரும் தமிழர்களை அவமானப்படுத்தியதாக பலரும் கொந்தளித்துள்ளனர். எல்லோரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இப்படி வேண்டா வெறுப்பாய் பேசி உள்ளனர்.