கலாநிதியை உச்சி குளிர வைத்த நெல்சன்.. விட்டதைப் பிடித்த சன் பிக்சர்ஸ்

Director Nelson: சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பத்தில் விநியோகஸ்தராக கொடிகட்டி பறந்த நிலையில் அதன் பிறகு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தனர். மாறன் குடும்பத்தினர் தொட்டது எல்லாமே பொன்னாகும். சினிமா, ஜவுளி, அரசியல், மருத்துவம் என இவர்கள் காலதடம் படிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு தமிழகம் மட்டுமன்றி பிற நாடுகளிலும் மாறன் குடும்பம் எக்கச்சக்க முதலீடுகளை செய்து வருகிறது. ஆனாலும் தயாரிப்பாளராக சன் பிக்சர்ஸ் சருக்களை தான் சந்தித்து வந்தது. முதலாவதாக நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தனர்.

இதில் சில படங்கள் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று பெருத்த அடி வாங்கி இருந்தது. அதேபோல் நெல்சனையும் பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்தப் படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு லாபத்தை பெற்றாலும் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து கலக்கத்தில் இருந்தது.

மேலும் பீஸ்ட் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து விமர்சன ரீதியாக தோல்வி படங்களை கொடுத்த சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் அண்ணாத்த படத்தின் ஹீரோ ரஜினியை சேர்த்து ஒரு காம்போவில் ஜெயிலர் படத்தை எடுக்க முடிவு செய்தது. இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்ற சந்தேகத்தில் தான் தயாரிப்பு நிறுவனம் இருந்தது.

ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனை உச்சிக்குளிர வைத்திருக்கிறார் நெல்சன். அதாவது ஜெயிலர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படத்தின் மூலம் பெரிய தொகை சன் பிக்சர்ஸ் லாபமாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் முந்தைய இரண்டு படங்களில் விட்டதை ஜெயிலர் படம் மூலம் சன் பிக்சர்ஸ் பிடித்திருக்கிறது.