தளபதி 65 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு 47-வது பிறந்த நாள் விருந்து வைத்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்கே இந்த படத்தில் இணைந்துள்ளார்.
நாளை தளபதி பிறந்தநாள் என்பதால் இன்று இந்த படத்தின் Beast என்ற டைட்டில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Beast.
தளபதி 66 படத்தின் அப்டேட் நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல்முறையாக தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்க்கிறார் விஜய்.
இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து எப்படியாவது அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட வேண்டுமென்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
