33 வயது நடிகையை ரஜினிக்கு வில்லியாக்கும் நெல்சன்.. 4 ஸ்டேட்டிலும் மாட்டி விடும் சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முமரமாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு படம் வெளியாக இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இப்போதே சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்திலுள்ள பிரபலங்களின் புகைப்படத்தை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் ஜெயிலர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது.

இன்று பிரபல நடிகையின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெல்சன் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக 33 வயது நடிகையை கோர்த்து விட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்ற நடிகர் தமன்னா ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அவர் ஜெயிலர் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் தமன்னா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான கதாபாத்திரம் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த போஸ்டரில் தமன்னா கருப்பு நிற உடையில் மாஸ் லுக்கில் உள்ளார். ஜெயிலர் படத்தில் ஒரு ஸ்டைலிஷ் வில்லியாக தமன்னாவை காணலாம். சமீபகாலமாக இங்கு நமக்கு பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் விஜய் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய ஸ்கோப் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நெல்சன் தமன்னாவை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் நாலு ஸ்டேடிலும் மாட்டுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர் வெளியிட்டால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

tamannaah-jailer