Rajini gave 2 chance to 90s Favorite’s: பொதுவாக சினிமாவில் சான்ஸ் கிடைத்து விட்டால் மிகவும் பிரபலமாகிவிடலாம். பணம் வசதி என்று ஓரளவுக்கு செட்டில் ஆகிவிடலாம் என்று தான் பலரும் கணக்கு போட்டு வருவார்கள். அதே நேரத்தில் நடிகைகளுக்கு ஒரு சின்ன பயமும் இருக்கும் சினிமாவிற்குள் நுழைந்து விட்டால் அவர்கள் இஷ்டப்படி நடிக்க வேண்டுமோ, பெயர் டேமேஜ் ஆகி விடுமோ என்று ஒரு தயக்கம் இருக்கும்.
அதனாலேயே சிலர் வந்த வாய்ப்பையும் தட்டிக் கழித்து இருக்கிறார்கள். அப்படி 90ஸ் காலத்தில் ஃபேவரிட் ஆக இருந்தவர் ஒருவரை ரஜினி போன் பண்ணி இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் என்று கூப்பிட்டு இருக்கிறார். ரஜினி கூட ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் யாரும் முக்கால்வாசி தயக்கம் காட்ட மாட்டார்கள்.
ஆனால் இவர் ரஜினி கூப்பிட்டதற்கு நோ சொல்லி ரொம்பவே கெத்து காட்டியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை 90ஸ் காலத்தில் ரொம்பவே விரும்பி பார்த்த நிகழ்ச்சி என்றால் பெப்சி உமா. இவருடைய குரலுக்கும் அழகுக்கும் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அதனாலேயே என்னமோ ரஜினிக்கும் இவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அப்படி ரஜினி கூப்பிட்ட படங்கள் என்னவென்றால் முத்து மற்றும் அருணாச்சலம். ஆனால் இவருக்கு நடிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டார். தற்போது மறுபடியும் பெப்சி உமா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை பேட்டி எடுத்த பத்திரிக்கையாளிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து வந்திருக்கிறார்.
அத்துடன் பெப்சி உமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது ரஜினி போன் பண்ணி என்னமோ தெரியல உங்க பக்கத்துல எவ்வளவு பெரிய செலிபிரிட்டி இருந்தாலும் எனக்கு உங்களை மட்டும் தான் பார்க்க தோன்றது. அந்த அளவிற்கு அற்புதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என்று பாராட்டியதாக கூறியிருக்கிறார்.
அத்துடன் கமலுடன் அன்பே சிவம் படமும், ஷாருக்கானுடன் ஒரு படமும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதையும் மறுத்திருக்கிறார். அதன்பின் சச்சின் ஒரு விளம்பரத்தில் நடிக்கும் போது அதில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அதில் கொஞ்சம் கிளாமரான உடை அணிய வேண்டும் என்பதால் அதற்கும் நோ சொல்லியிருக்கிறார். இப்படி இந்த விஷயங்களை எல்லாம் அப்பொழுது வேண்டாம் என்று மறுத்துவிட்டு தற்போது அனைத்து இடங்களிலும் புலம்பி வருகிறார்.