பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் திறமை இருந்தும் தங்களது கெட்ட பழக்கங்களாலும், சரியான நண்பர்கள் இல்லாத காரணங்களாலும், சினிமாவை விட்டே காணாமல் போய் விடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள் அரசியலுக்கு சென்று சினிமா வாய்ப்புகளை இழந்த கதையெல்லாம் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர், தன் சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சனையால் சினிமாவை விட்டே போய்விட்டார்.

அதுவும் இரண்டு பொண்டாட்டிகளை திருமணம் செய்துக்கொண்டு படாத பாடு பட்டு சினிமாவை பற்றி யோசிக்க கூட முடியாத பல இன்னல்களை சந்தித்துள்ளார் அந்த நடிகர். நடிகை சீதாவின் வீட்டில் வேலை செய்து வந்த அந்த நடிகருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடர் படங்களில் அவர் நடித்து வந்தார். 1990 காலக்கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் நடித்து வந்தனர்.

அந்த சமயத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் சரவணன். தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, திரும்பிப் பார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த இவர், சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டு கார்த்தியின் நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக்குவித்தார்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், பருத்திவீரன் படம் போல் இவருக்கு வெற்றி வாய்ப்புகள் அமையவில்லை. இதனிடையே பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர், தன் வாலிப பருவத்தில் பெண்களிடம் நடத்திய சில்மிஷத்தை பற்றி வெளிப்படையாக பேசினார்.இதன் காரணமாக அப்போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

அந்த போட்டியின் போது, சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிகழ்வை அவரே பகிர்ந்தார். அதில் சரவணன், முதல் முதலாக காதலித்து திருமணம் செய்த மனைவியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததால், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் இரு மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வருவதால் பல பிரச்னைகள் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததாக தெரிவித்தார்.

இதன் காரணமாக சினிமாவில் தன்னால் கவனம் செலுத்த முடியாமல் போனதாக அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் தனக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என சரவணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்துள்ள நிலையில், அதில் கலந்துக்கொண்ட பல போட்டியாளர்களின் நிலை சினிமாவில் வாய்ப்பில்லாமல் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.