கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த நாவலை ரசிகர்கள் பலமுறை படித்து ரசித்து இருந்தாலும் அதை திரையில் பார்ப்பதற்கும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலேயே இப்படம் தற்போது வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் அடுத்த பாகத்தை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சி ஒன்று தற்போது ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. அதாவது செம்பியன் மாதேவி மற்றும் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்திற்கு இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த விஷயம் ராக்ஷ மாமனே பாடலில் சேந்தன் அமுதனாக வரும் அஸ்வின், திரிஷாவை சந்திக்கும்போது மறைமுகமாக காட்டப்பட்டு இருக்கும்.
ஆனால் அந்த டிவிஸ்ட் இளவரசி குந்தவையால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஏனென்றால் அந்தப் பாடலில் தான் திரிஷாவின் அறிமுகம் காட்டப்பட்டிருக்கும். அதில் இளவரசிக்கே உரிய அழகிலும் கம்பீரத்திலும் திரிஷா அவ்வளவு அழகாக இருப்பார். மேலும் இளவரசியை வந்தியத்தேவன் கார்த்தி பார்க்கும் பார்வையும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
இதைப் பார்த்து மெய் மறந்த ஆடியன்ஸ் கதையில் இருக்கும் முக்கிய விஷயத்தை பார்க்க தவறி விட்டார்கள். இதுதான் அடுத்த பாகத்திற்கான திருப்புமுனையாகவும் இருக்கும். இந்த விஷயத்தை தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதாவது இளவரசி குந்தவையை பார்த்த ஆர்வத்தில் ரசிகர்கள் இதை கவனிக்க மறந்து விட்டார்கள் என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட போட்டோ சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.