என்னது! அமரன் vs ரெட்ரோவா.. இப்படியும் ஒரு ராஜ தந்திரம் தேவைதானா?

Suriya: கடந்த இரண்டு தினங்களாக டிவிட்டரில் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதாவது அமரன் பட கெட்டப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம், வாரணம் ஆயிரம் படத்தின் ஆர்மி கெட்டப்பில் இருக்கும் சூர்யா மன்னிப்பு கேட்பது போல்.

மேலும் வீடியோவில் கேப்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் முதல் நாள் வசூலை கூட ரெட்ரோ தாண்டவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படியும் ஒரு ராஜ தந்திரம்

இது என்ன புதுசா சூர்யாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டி என்று தோன்றலாம். கங்குவா படத்திற்கு முன் அமரன் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதை வைத்து அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதல் கட்ட ஹீரோவாக முன்னேறி விட்டார் என்றும் பேசப்பட்டது.

மேலும் சமீப காலமாக சூர்யாவுக்கு பெரிய அளவில் வெற்றி படங்களை ஏதும் இல்லாததால் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டது போல் காட்டப்படுகிறது.

ஏன், விஜய் இடத்தையே அவர் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த தான் சூர்யாவின் படத்துடன் சிவகார்த்திகேயனின் படத்தை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

அமரன் படமே ரிலீஸ் ஆகி ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் போது எப்போவோ ரிலீஸ் ஆன அயலான் படத்துடன் சூர்யா படத்தை ஒப்பிடுவதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் தான்.