விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கிறது. தளபதி அடுத்த படத்தில் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் விஜய்க்கு ஸ்கிரிப்ட் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிக்கு அடுத்து இப்போது மாஸ் ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். விஜய் யை நம்பி தயாரிப்பாளர்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் போட்டு படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வாங்க தயாராக இருக்கிறார்கள், அதே போன்று மற்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி வளர்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் மற்றும் பெண் ரசிகைகள் அதிகம். இதனால் அவருடைய படத்திற்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சிவா இப்போது உச்ச நடிகர்கள் வரிசையில் வந்துவிட்டார் என்றே சொல்லலாம். சிவாவை நம்ம வீட்டு பிள்ளை என்றும் அனைவரும் அழைக்கின்றனர். இது போதாது என்று அடுத்த தளபதி என்று வேறு சொல்கின்றனர்.

தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும், அவர் மீதான ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. விஜய் திரைப்படங்களில் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகவே முடிகிறது. தளபதி விஜய்யின் சமீபத்திய படங்கள் எல்லாம் ரிலீசிற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்திக்கின்றன. விஜய் அரசியல் பேசுகிறார் என்பதே அவர் படங்களின் மீதான குற்றசாட்டு.

நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய படங்களில் அரசியல் பேசுகிறார். சில நேரங்களில் காமெடியாகவும் சில நேரங்களில் சீரியஸாகவும் கூட அரசியல் பேசுகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் பேசும் எந்த அரசியலும் பெரிதாக அரசியல் கட்சிகளால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அவர் என்ன பேசினாலும் அது பெரிதாக்கப்படுவது இல்லை.

இதுவே நடிகர் விஜய்யின் படம் என்றால் அதில் அவர் ஒரு வார்த்தை அரசியல் ரீதியாக பேசினாலும் பூதாகாரமாக்கி விடுகிறார்கள். சிவகார்த்திகேயன் பேசும் அரசியல் நியாயம் என்றும், விஜய் பேசும் அரசியல் நியாயமில்லை என்பது போலவும் ஆரம்ப நாட்களில் இருந்தே நடிகர் விஜயுடன் பிரபலங்கள் மோதி வருகின்றனர்.