பொன்னியின் செல்வன் படத்தால் பிரின்ஸ் படத்திற்கு வந்த சிக்கல்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக கார்த்தியின் சர்தார் படமும் வெளியாகிறது.

ஆனால் சர்தார் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு பிரின்ஸ் படத்திற்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் பிரின்ஸ் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. இதனால் சர்தார் படத்தின் மீது நம்பிக்கை வைத்து நிறைய திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் இப்போது வரை பொன்னியின் செல்வன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது காலை 4 மணி ஷோவே ஹவுஸ் ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறதாம். இதனால் பிரின்ஸ் படத்தை நம்பி பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்க உரிமையாளர்கள் பயப்படுகிறார்கள்.

ஒருவேளை பிரின்ஸ் படம் சொதப்பிவிட்டால் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை அந்த திரையரங்குகளில் வெளியிட முடியாது. இதனால் தற்போது தமிழ்நாட்டில் பிரின்ஸ் படத்திற்கு குறைந்த திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடுவில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் இப்போது தான் டாக்டர், டான் என வெற்றி படங்களை கொடுத்த முன்னேறி வருகிறார். இந்த சூழ்நிலையில் பிரின்ஸ் படத்திற்கு திரையரங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் வசூல் பாதிக்கக்கூடும்.

இந்த நிலையை அப்படியே மாற்றி திரையரங்குகளை ஹவுஸ் ஃபுல் ஆக்கி பிரின்ஸ் படத்திற்கு ரசிகர்களை வர வைக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயன் படாதபாடு பட்டு வருகிறாராம். அவருடைய முயற்சி கை கூடுகிறதா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும்.