கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் இந்த படத்தால் தற்போது படக்குழு அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
அதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு தேங்க்ஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் யாரும் எதிர்பாராத விதமாக கௌதம் மேனனுக்கு ஒரு பைக்கை சர்ப்ரைஸ் ஆக கொடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கர வைரலானது. ஆனால் அந்த நிகழ்வு சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அதிரி புதிரியாக வெற்றி பெறும் திரைப்படத்தின் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கார் போன்ற காஸ்ட்லியான பரிசை தான் கொடுப்பார்கள்.
சமீபத்தில் கூட விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். அந்த காரின் மதிப்பே பல லட்சம் என்று சொல்லப்பட்டது. அப்படி இருக்கும் போது ஐசரி கணேஷ் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கொடுத்துள்ளார்.
இப்படி ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு அவர் இன்னும் விலை மதிப்புள்ள பரிசை கொடுத்திருக்கலாமே என்று ஒரு கருத்து சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது ஹெலிகாப்டரில் வந்து அந்த நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தினார்.
இவ்வளவு செலவு செய்த ஐசரி கணேஷ் பரிசு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது தேங்க்ஸ் மீட் கொண்டாடிய படக்குழு விரைவில் சக்சஸ் மீட் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.