விஜய், திரிஷா கிட்ட இருந்து இத கத்துக்கோங்க பாஸ்.. உச்சாணி கொம்பில் இருப்பதன் காரணம்

Vijay – Trisha: சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் விஜய் த்ரிஷாவை பற்றி பேசி இருந்தார். ஒருத்தங்க 20 வயசில் ஹீரோயின் ஆகிறது பெருசு இல்ல, 20 வருஷமா ஹீரோயினா இருக்கிறது தான் பெருசுன்னு. இந்த விஷயம் விஜய்க்கும் பொருந்தும். சக்சஸ் மீட் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் மற்றும் த்ரிஷா செய்த விஷயம் எல்லோரையுமே அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

லியோ திரைப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவை பார்க்கும் பொழுது, 2004 இல் ரிலீசான கில்லி படத்தில் பார்த்தது போலவே இருந்தார்கள். அடடே 90ஸ் கிட்ஸ்களுக்கு இவ்வளவு வயசு ஆகிவிட்டதா என்று இவர்கள் இருவரையும் வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட வந்தது. இளமையாக இருப்பது மட்டுமில்லாமல், இவர்கள் இருவருடைய வெற்றிக்கும் காரணமும் ஒன்றாக தான் இருக்கிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையும் நிலையில் விஜய், தன்னுடைய 68 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லியோ ரிலிஸ் முடிந்த கையோடு தளபதி 68க்கு பூஜையும் போடப்பட்டது. அதேபோன்றுதான் த்ரிஷாவுக்கும் லியோ சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது துபாயில் உள்ள அஜர்பைஜானில் நடைபெற்ற வருகிறது. லியோ வெற்றி விழா முடிந்த உடனேயே, திரிஷா பிளைட் பிடித்து துபாய்க்கு சென்று விட்டார். விஜய் தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்ல டிக்கெட் முதற்கொண்டு புக் செய்து விட்டாராம். அதற்குள் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விஜய் உடனே டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மருத்துவமனைக்கு போய் அவரை பார்த்திருக்கிறார். அடுத்த நாளே தாய்லாந்துக்கு டிக்கெட் போட்டு கிளம்பிவிட்டார். தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக தான் விஜய் இப்போது தாய்லாந்து சென்றிருக்கிறார்.

இப்படி இவர்கள் இருவருமே ஓய்வில்லாமல் உழைப்பது தான் அவர்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம். இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால்  அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஓவராக அலட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால் விஜய் மற்றும் திரிஷா இன்னமும் தங்களுடைய தொழிலை மதிப்பது தான் அவர்கள் உச்சாணிக் கொம்பில் இருப்பதற்கு காரணம்.