Actor Sivakarthikeyan: எல்லா ஏழரையும் ஒரே நேரத்துல வந்தா என்னதான் பண்றது. இதுதான் இப்ப சிவகார்த்திகேயனின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. குறுகிய காலத்திலேயே கிடுகிடுவென உயர்ந்த இவருடைய மார்க்கெட் இப்போது சென்னை வெள்ளத்தில் சிக்கியது போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அதிலும் இப்போது மூன்று பிரச்சனைகள் அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. அதில் கமல் வைத்திருக்கும் ஆப்பு தான் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட கைமீறி போய்விட்டதாம். இதனால் டென்ஷனான கமல் இப்போது சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் கை வைத்திருக்கிறார். பேசிய தொகையில் ஒரு பகுதி குறைந்ததில் இப்போது அவர் அப்செட் ஆகியுள்ளார்.
இரண்டாவதாக வருட கணக்கில் இழுத்தடித்து வந்த அயலான் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே படத்தில் இருக்கும் முக்கியமான காட்சி ஒன்று இணையதளத்தில் கசிந்து விட்டது. இப்படம் ஓடக்கூடாது என சில விஷமிகள் பார்த்த வேலை தான் இது.
மூன்றாவதாக சென்னை வெள்ள பாதிப்புக்காக இவர் 10 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தார். ஆனால் இமான் மனைவியுடன் இவருக்கு இருந்த உறவு வெளிவந்ததில் சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது.
அதை சரி செய்யத்தான் இப்படி நாடகம் ஆடுகிறார் என்ற பேச்சு இப்போது எழுந்துள்ளது. இப்படியாக தொடர்ந்து அவருக்கு மன உளைச்சலைத் தரும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அவர் தன் மீதுள்ள கலங்கத்தை போக்கிவிடுவார் என அவரின் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.