தளபதி 67 மொத்த கதை இதுதான்.. லோகேஷ் LCU-வில் ரோலக்ஸ் என்கிற ஒத்த தலையை எடுக்க பத்து தல அவதாரம்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அவரின் ஒவ்வொரு படத்துக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் கமலுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் கைதி படத்தின் கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருந்தது.

அதாவது கைதி படத்தில் நடித்திருந்த நரேன் அதே கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் கார்த்தியின் குரல் மட்டும் விக்ரம் படத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் தளபதி 67 படத்திலும் லோகேஷின் முந்தைய படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறவுள்ளது.

அதாவது விக்ரம் படத்தில் கடைசி 5 நிமிடங்களில் ரோலக்ஸ் மிரட்டியது போல, தளபதி 67 படத்தின் கிளைமாக்ஸில் விக்ரம் கமல் வர உள்ளார். மும்பையில் கேங்ஸ்டர் தலைவராக இருக்கும் விஜய் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள். அப்போது கையில் துப்பாக்கி உடன் விஜய் யார் என்று கேட்கிறார்.

அங்கு கமல் விஜய்யின் உதவியை நாடி வந்துள்ளார். சீனியர் ஒரு நிமிடம் சுட்டு இருப்பேன், நீங்க எப்ப மும்பைக்கு வந்தீங்க என கமலை பார்த்து விஜய் கேட்கிறார். அந்தச் சமயத்தில் இப்போது ஒருவரை முடிக்கணும் என கமல் கேட்க, இப்ப யாரையும் கொலை பண்றது இல்ல என்ற விஜய் கூறுகிறார்.

கொலை பண்ண போறது ரோலக்ஸ்-னு சொன்னா என கமல் ஆரம்பிக்கும் போதே எப்ப ஸ்டார்ட் பண்ணலாம் என விஜய் கேட்கிறார். ஏற்கனவே தொடங்கியாச்சு என்று கமல் சொல்வதுடன் தளபதி 67 படம் முடிகிறது. இதைத்தொடர்ந்து லோகேஷின் கைதி 2 படத்தில் கமல், விஜய் என இருவருமே நடிக்க இருக்கின்றனர்.

அதில் கைதி டில்லி, விக்ரம் கமல், தளபதி 67 விஜய் மூவரும் சேர்ந்து ரோலக்ஸை ஸ்கெட்ச் போட்ட தூக்க உள்ளனர். ரோலக்ஸ் என்ற ஒரு தலையை எடுக்க இந்த பத்து தலைகள் தேவைப்படுகிறது. இவ்வாறு தான் தளபதி 67 மற்றும் கைதி 2 கதை அமைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது கற்பனையாக இருந்தாலும் நிஜக் கதையில் லோகேஷ் பிரம்மாண்டத்திற்கு குறை இருக்காது.

கையில் துப்பாக்கி உடன் விஜய்

thalapathy-67-story

தளபதி 67 இல் விக்ரம் மாஸ் என்ட்ரி

thalapathy-67-story

விஜய், கமல் ஒரே திரையில்

thalapathy-67-story

ரோலக்ஸை தீர்த்து கட்ட திட்டம்

thalapathy-67-story