கோலிவுட்டில் தற்சமயம் வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரும் பொருட்சளவில் எடுக்கப்படுவதால் அதன் லாபத்தை கோடிக்கணக்கில் எதிர்பார்க்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை 100 கோடியை தாண்டிய ஹீரோக்களின் படங்கள் எத்தனை என்பது தெரியவந்துள்ளது.
7-வது இடம்: ஏழாவது இடத்தில் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி இருக்கின்றனர். இவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது.
6-வது இடம்: டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களில் 100 கோடியை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் 6-வது இடத்தில் உள்ளார். இவருடைய நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் அயலான் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5-வது இடம்: ஐந்தாவது இடத்தில் 4 ஹீரோக்கள் ஒவ்வொருவரும் இரண்டு இரண்டு படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து இருக்கின்றனர். நடிகர் கார்த்தி கைதி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற 2 படங்களிலும், நடிகர் விக்ரம் ஐ, பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு படங்களிலும், உலகநாயகன் கமலஹாசன் விஸ்வரூபம், விக்ரம் போன்ற இரண்டிலும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கின்றனர்.
4-வது இடம்: நான்காம் இடம் சூர்யாவிற்கு கிடைத்திருக்கிறது. இவருடைய நடிப்பில் வெளியான சிங்கம் 2, 24, சிங்கம் 3 போன்ற மூன்று படங்களிலும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து இந்த லிஸ்டில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார்.
3-வது இடம்: அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை என மொத்தமாக ஐந்து படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இவருடைய நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான துணிவு படமும் சீக்கிரம் 100 கோடியை தட்டி தூக்க காத்திருக்கிறது
2-வது இடம்: இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒன்பது படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறார். இவரது நடித்த சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி, காலா, 2.O, பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற 9 படங்களும் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஆகி, இந்த லிஸ்டில் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடம்: பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரசிகர்களால் போற்றப்படும் விஜய் இதுவரை இவருடைய நடிப்பில் வெளியான 11 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துமுதல் இடத்தில் உள்ளார். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, புலி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்கள் 100 கோடி வசூலித்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வாரிசு படமும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகி மீண்டும் அவரை பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என நிரூபித்து இருக்கிறார்.
இவ்வாறு கோலிவுட்டில் இருக்கும் டாப் கதாநாயகர்கள் இதுவரை நடித்து வெளியான படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகியிருப்பதும், அதில் யார் அதிக முறை 100 கோடிக்கு மேல் வசூலித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதை வைத்து டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.