குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.

அதேபோல் த்ரிஷாவின் படங்களும் தமிழ் மொழியில் சமீப காலமாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் த்ரிஷா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்ற முக்கியமான பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த சூழலில் பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரமோஷன் வேளையில் படக்குழு இறங்கி இருந்தது. இதில் திரிஷா பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை செய்து வந்தார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.

இதில் ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வருமனின் சகோதரி குந்தவை. சோழ சாம்ராஜ்ஜியத்தில் உள்ள முக்கிய முடிவுகளை இவர் தான் எடுப்பார். குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவின் உடை, நகை அலங்காரம் அற்புதமாக இருந்தது. அதுமட்டுமின்றி தற்போது பிரமோஷனுக்கும் விதவிதமான புடவையில் வந்த கலக்குகிறார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தினால் திரிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு தொடர்ந்து வருகிறதாம். இதனால் தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி உள்ளாராம் த்ரிஷா. அதற்காக எடுத்த உடனே இரண்டு, மூன்று கோடி என சம்பளத்தை உயர்த்தி கேட்கிறாராம்.

ஆனாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் த்ரிஷாவுக்கு உள்ள மார்க்கெட்டினால் எவ்வளவு சம்பளத்தை கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள். மணிரத்தினத்தின் மூலம் த்ரிஷா தரமான கம்பேக் கொடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.