விக்னேஷ் சிவனுடன் இணைய மறுத்த திரிஷா.. அஜித்தின் AK62 படத்திற்கு வந்த சோதனை

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் துணிவு படத்திற்குப் பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை லைக்கா தயாரிக்க இருக்கிறது. இந்த சூழலில் ஏகே 62 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் இந்த படத்தில் நடிக்க திரிஷா மறுத்து விட்டாராம். விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லையாம்.

ஏற்கனவே அஜித், திரிஷா கூட்டணியில் வெளியான மங்காத்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் மீண்டும் இந்த ஜோடி இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் திரிஷா இப்போது விலகி விட்டதால் வேறு கதாநாயகிகளுக்கு படக்குழு வலை வீசி வருகிறாம்.

அதுமட்டுமின்றி திரிஷா விஜயின் தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இது தவிர கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் திரிஷாவிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆகையால் இப்போது ஏகே 62 படத்தில் காஜல் அகர்வால்விடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் தற்போது மும்மரமாக உள்ளார். ஆகையால் ஏகே 62 படத்தில் நடிக்க இவரது கால்ஷீட் கிடைப்பது கடினம் தான். ஆகையால் வேறு யாராவது போடலாமா என விக்னேஷ் சிவன் யோசித்து வருகிறாரம்.

சமீபகாலமாக அஜித்தின் படங்களில் பாலிவுட் நடிகைகள் தான் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வலிமை படத்தில் ஹீமா குரேஷி நடித்திருந்தார். இப்போது துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதே போல் ஏகே 62 படத்திலும் பாலிவுட் நடிகை நடிக்க அதிக வாய்ப்புள்ளது.