நடிகர் அஜித் நடித்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை போனிகபூரின் ஜி மூவிஸ் தயாரிக்க, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
துணிவு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிய போதே அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுக்கள் வெளியாகின. அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரொடக்சன் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
AK 62 படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கான எல்லா வேலைகளையும் விக்னேஷ் ஆரம்பித்து விட்டார். வரும் டிசம்பரில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்து ஜூனில் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
படப்பிடிப்பின் எல்லா வேலைகளும் முடிந்து வரும் ஆகஸ்டில் திரையிட திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதாவது அடுத்த வருட தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும். ஏ கே 62 ஆக்சன் கலந்த த்ரில்லருடன், விக்னேஷ் சிவனுக்கே உரித்தான காமெடியுடன் இருக்கும். இந்த படம் ஒரு மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
இந்த அப்டேட்டில் இன்னொரு டிவிஸ்ட் என்னவென்றால், வாரிசு படத்தை முடித்த பிறகு தளபதி விஜயும் தன்னுடைய அடுத்த படமான தளபதி 67 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். எனவே கிட்டத்தட்ட இந்த இரண்டு படங்களின் வேலைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதால் ரிலீசும் ஒரே நேரத்தில் இருக்கலாம்.
தளபதி 67 படத்தை இயக்க இருப்பது லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் விக்னேஷ், லோகேஷ் கனகராஜுடன் மோத வேண்டி வரும். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து வரும் லோகேஷுடன் மோத விக்னேஷ் சிவன் கொஞ்சம் யோசிக்கவே வேண்டும்.