தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே திரையரங்கில் திருவிழா போல கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம் கோடான கோடி ரசிகர்கள் இருப்பதுதான்.
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய் தான் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றன. பல நடிகர்கள் வெற்றி கொடுக்க தடுமாறும் நிலையில் நடிகர் விஜய் மற்றும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
அதனால் பல கதாநாயகிகள் மற்றும் குணச்சித்திர நடிகர்கள் விஜய் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இவருடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்து விட்டால் போதுமானது எப்படியும் 5, 6 படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். தற்போது நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்கண்டில் நடந்து முடிந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பிரியமானவளே படத்தில் ஒரு பாடலுக்கு பெண்வேடம் போட்டு நடனமாடி இருப்பார். அதேபோல் வேட்டைக்காரன் படத்திலும் ஒரு பாடலுக்கு பெண் வேடம் அணிந்து இருப்பார். ஆனால் தற்போது நடிகர் விஜய் சிறு வயதில் பெண் வேடம் அணிந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகர் விஜய் ஏதோ ஒரு வேடம் அணியும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.