தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் ஆறடி நடிகை.. விஜய் டிவி நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்ற வருகின்றன. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் என படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிறி இருக்கிறது. லியோ படத்தின் பரபரப்பு குறைவதற்குள் தளபதி 68 அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

விஜய் தளபதி 68 இல் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து இருக்கிறார். மேலும் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்ற மிகப்பெரிய கூட்டணியும் உருவாகி இருக்கிறது. இல்லையோ படப்பிடிப்புகள் முடிந்த கையோடு ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு விஜய் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

லியோ படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய், த்ரிஷாவுடன் இணைந்திருக்கிறார். தளபதி 68 படத்திலும் இந்த கூட்டணியை தொடரவே முதலில் வெங்கட் பிரபு முடிவு செய்திருந்தார். த்ரிஷா ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறது பட குழு.

இதனால் தளபதி 68 படத்தின் கதாநாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஜய்க்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின்கள் யாராவது களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெங்கட் பிரபு லோ பட்ஜெட் ஹீரோயின் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக இந்த ஹீரோயின் நடிக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் அவர் ஒரு சில படங்களிலேயே நடித்த நடிகை.

செய்தி வாசிப்பாளராக இருந்து, விஜய் டிவியின் கல்யாண முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி சங்கர்தான் அந்த நடிகை. இவர் மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தனக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம். இவர் இதுவரை எந்த ஒரு முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டது இல்லை.

வைபவ், ஜெய் போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருந்த இவர் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போவார். தற்போது விஜய்க்கு ஜோடியாகும் அளவிற்கு இவர் வளர்ந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பாக பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோயினாக மாறிவிடுவார்.