இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா! இந்திய சினிமாவை வாயை பிளக்க வைத்த வசூல்ராஜா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கைதி படத்தில் இடம்பெற்ற சம்பவங்களும், அதில் சில கதாபாத்திரங்களையும் விக்ரம் படத்துடன் தொடர்புபடுத்தி இருந்தார் லோகேஷ். மேலும் விஜய்சேதுபதியை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் காட்டியிருந்தார்.

அதேபோல் சூர்யாவும் சில நிமிடங்கள் வந்தாலும் அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. மேலும், விக்ரம் படம் ரிலீசுக்கு முன்பே சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவை பெரிய தொகைக்கு சென்றது.

இந்நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் விக்ரம் படம் கோடிகளை குவித்து வருகிறது. அதாவது படம் வெளியாகி இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்ததாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வரை எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆக உள்ளதாம். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 12 நாட்களை கடந்து டான் படம் 100 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டே நாட்களில் விக்ரம் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது.

இது விக்ரம் பட குழு மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு லோகேஷ் தன்னுடைய அடுத்தடுத்த தொடர் வெற்றியால் மிகப்பெரிய உயரத்தை அடைந்து வருகிறார். மேலும், இரண்டே நாளில் எவ்வளவு வசூல் என இந்திய சினிமாவையே வாய்பிளக்க செய்துள்ளார் நம்ப வசூல்ராஜா கமலஹாசன்.