வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கோடிகளில் புரளும் 5 இளம் இயக்குனர்கள்.. டாப் கியரில் எகிறும் லோகேஷின் சம்பளம்

5 Young Directors Salary Details: ஒருத்தருக்கு நேர காலம் மட்டும் நல்லா இருந்தா அவருடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தான் ஐந்து இளம் இயக்குனர்களுக்கு இப்போது பொன்னான காலம். இளம் இயக்குனர்களாக இருக்கக்கூடிய இவர்களெல்லாம் இப்போது டாப் ஹீரோக்களின் படங்களை வரிசையாக தட்டி தூக்கி கொண்டிருக்கின்றனர். அதோடு சம்பளங்களையும் கோடிக்கணக்கில் வாங்கி கோடிகளில் புரளுன்றனர்.

மகிழ்திருமேனி: துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்திருமேனி இதற்கு முன்பு முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற தரமான படங்களை கொடுத்தவர். இவருடைய சம்பளம் இப்போது 5 கோடி.

நெல்சன் திலிப் குமார்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலாபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்த நெல்சன் திலீப் குமார், திரை உலகில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் பயணிக்கும் மிக சிறந்த இயக்குனர். இவர் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த டாக்டர் படம் 100 கோடி வசூலை தட்டித் தூக்கிய பிறகு, அவருடைய ரேஞ்சே வேற. தளபதியின் பீஸ்ட், தலைவருடன் ஜெயிலர் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் சம்பவம் செய்த நெல்சன், இப்போது ஒரு படத்திற்கு சம்பளமாக 55 கோடி வாங்குகிறார்.

Also Read: ஜான் ஏறுனா முழம் சறுக்குது.. நிம்மதியை தேடி இமயமலைக்கு போகும் சூப்பர் ஸ்டார்

அசுர வேகத்தில் வளரும் ஐந்து இளம் இயக்குனர்கள்

லோகேஷ் கனகராஜ்: இவர் என்னதான் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் மட்டுமே எடுத்தாலும் எடுத்த படங்கள் எல்லாம் தரமான மாஸ்டர் பீஸ்ட், மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ், இப்போது புதிதாக LCU என்ற கான்செப்டில் ரசிகர்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்கள் எல்லாம் வசூலில் பொளந்து கட்டியது. அடுத்ததாக லோகேஷ் தலைவருடன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகிவிட்டார். இப்போது அவர், ஒரு படத்திற்கு மட்டும் 40 முதல் 45 கோடி சம்பளம் கேட்கிறார்.

பிரதீப் ரங்கநாதன்: கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் கதாநாயகனாகவும் நடித்து பட்டித் தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிரதீப் ரங்கநாதன் 7 முதல் 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.

எச் வினோத்: சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச் வினோத், அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று என்ற மிரட்டலான படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பின்பு அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறி நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை வரிசையாக இயக்கினார். இப்போது அவருடைய சம்பளம் 10 கோடிக்கு எகிறி இருக்கிறது.

Also Read: லால் சலாம் பட தோல்விக்கு இவர்தான் காரணம்.. கூச்சமே இல்லாமல் பழி போடும் ஐஸ்வர்யா

Trending News