பிறந்தவீட்டுக்கு திரும்பிய ரவிச்சந்தர் அஸ்வின்.. ஐயோ! இப்பவே ஐபில் பீவர் ஆரம்பிச்சிடுச்சே

Ravichandar Ashwin: இத்தனை வருடங்களாய் ராஜஸ்தான் ராயலுக்காக விளையாடிக் கொண்டிருந்த நம் தமிழ் மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே திரும்பி இருக்கிறார்.

அஸ்வின் IPL 2025 சீசனுக்காக 9.75 கோடி ரூபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மூலம் வாங்கப்பட்டுள்ளார்.

இப்பவே ஐபில் பீவர் ஆரம்பிச்சிடுச்சே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது இளம் வீரர்களின் மீது முதலீடு செய்யும் சூழலில், அதாவது யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பரக் மற்றும் த்ருவ் ஜூரெல் போன்றவர்களை தக்க வைக்க எடுத்த முயற்சியில் , அஷ்வின் மற்றும் யூஸ்வேந்திர சாகல் போன்றவர்கள் ராஜஸ்தான் அணியில் இடம் பெறவில்லை

ஏற்கனவே அஷ்வின் சென்னை அணிக்கு திரும்புவதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் , மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 வருடங்கள் கழித்து CSK அணியின் மஞ்சள் நிற சட்டை அணிந்து விளையாடுவதை நினைத்து பார்க்கும் போது ஐபில் காய்ச்சல் அதிகரித்து விட்டது.

அஷ்வின் IPL இல் 211 போட்டிகளில் இதுவரை 180 விக்கெட்டுகளை தூக்கி , 800 ரன்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்வின் தனது தொடக்க காலங்களில் CSK அணியில் விளையாடிய போது தான் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அஸ்வினின் அதிரடி ஆட்டம் CSK க்கு 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் IPL கோப்பை வெற்றிக்கொண்டுவர உதவியது.

அஷ்வின் ஆறு சீசன்கள் CSK க்காக விளையாடி, 2016 ஆம் ஆண்டில் இரண்டு வருடங்கள் தடைசெய்யப்பட்டபின், ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணியுடன் இணைந்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் அணியில் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment