சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

சமீபத்தில் அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்ட 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி

சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்ட 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபலங்கள் நடித்த வெளியாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு 600 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Also Read :பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

வெந்து தணிந்தது காடு : கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 480 திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தி லெஜண்ட் : சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி கதாநாயகனாக வெள்ளிதிரையில் கால் பதித்த படம் தி லெஜண்ட். இந்த படத்தை அண்ணாச்சியே சொந்தமாக தயாரித்திருந்தார். தி லெஜண்ட் படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் 700 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது.

Also Read :OTT-யில் விலை போகாமல் காத்திருக்கும் 4 படங்கள்.. எவ்வளவு அடி விழுந்தாலும் அசராத அண்ணாச்சி

பீஸ்ட் : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது. பீஸ்ட் படம் கிட்டதட்ட 800க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

வலிமை : சமீபத்தில் வெளியான படங்களில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட படம் வலிமை தான். ஹெச் வினோத், அஜித், போனிகபூர் கூட்டணியில் வெளியான வலிமை படம் கிட்டத்தட்ட1,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. மேலும் இதே கூட்டணியில் துணிவு படம் உருவாகி வருகிறது.

Also Read :முதல் நாள் கலெக்ஷனில் மிரட்டிய 10 திரைப்படங்கள்.. முதலிடத்தை தக்க வைத்துள்ள அஜித்

- Advertisement -spot_img

Trending News