ரஜினி கமலுக்கு பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களது படங்களுக்கு வியாபாரமும் வரவேற்பும் எக்கச்சக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் விஜய் அஜித்திற்கு பிறகு யார் என்ற போட்டியில் பல நடிகர்கள் இருக்கின்றனர். சூர்யா தனி ஒரு நாயகனாக கலக்கி வருகிறார். அவருக்கான போட்டி நடிகர்கள் இதுவரை யாரும் இல்லை. ஒரு காலத்தில் விக்ரம் கூறப்பட்டாலும் தற்போது சூர்யா சோலோ ஹீரோ தான்.
அவருக்கு அடுத்தபடியாக தனுஷ் மற்றும் சிம்பு என ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. தற்போது சிம்பு சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருப்பதால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே செம போட்டி நிலவி வருகிறது. படத்திற்கு படம் இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனை செய்து வருகின்றன.
ஆனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரை விட சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் பெரிய அளவு வசூல் செய்து வருகிறது. கைதி படம் ஒரு 100 வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற மூவரில் யாருடைய மார்க்கெட் பெரியது என்பது இன்னும் ஒரே மாதத்தில் தெரிந்துவிடும்.
வருகின்ற மார்ச் 26ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளிவருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த வாரமே கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷின் கர்ணன் படம் வெளியாகிறது.
இந்த மூன்று படங்களின் வசூல் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே தமிழ் சினிமாவில் இவர்களது ரேட்டிங் அமையப் போகிறது. இது இவர்களுக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் காதை கடிக்கின்றனர்.