சிவகார்த்திகேயனுக்கு நிகராக சம்பளம் கேட்கும் நெல்சன்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் தற்போது அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர் என்றால் அது நெல்சன் திலீப்குமார் தான். டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நெல்சன் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார்.

100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்த டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார். சிவகார்த்திகேயன் தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க இருக்கிறார்.

அந்தப் படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு இணையாக 30 கோடி சம்பளத்தை உயர்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே நெல்சன் டாக்டர் படத்தின் வெற்றியால் சற்று தலைகணத்துடன் நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு அதிகப்படுத்தி இருப்பது தயாரிப்பாளர்கள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நெல்சனுக்கு நெருக்கமானவர்கள் சிலரும் அவரைப் பற்றி புகழ்ந்து பல செய்திகளை கூறி வருகின்றனர். இதுவும் அவருடைய சம்பள உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.