சமீபகாலமாகவே தமிழ் சினிமாவை பிறமொழி நடிகைகள் தான் ஆட்சி செய்கின்றனர். அந்த வகையில் கன்னட திரைப்படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கிய இவர், அதன் பிறகு நானி நடித்த கேங்க் லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தார். பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா மோகன், அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். பின்பு மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறையாக, அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் படத்தில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.
இவர் நடித்த டாக்டர், டான் இரண்டு திரைப்படங்களும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வெகு சீக்கிரமே தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன், டான் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
பிரியங்கா மோகன் டான் படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக வெறும் 50 லட்சம் மட்டுமே சம்பளமாகப் பெற்றிருக்கிறார். ஒரு ஹிட் படங்களை கொடுத்தாலே அடுத்தடுத்த படங்களில் பல மடங்கள் சம்பளத்தை ஏற்றும் கதாநாயகிகளின் மத்தியில், பிரியங்கா மோகன் தன்னுடைய சம்பளத்தை ஏற்றாமல் இருப்பது கோலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக போட்ட பிளான் ஆகவும் இருக்கலாம்.
அவர் நினைத்தபடியே டான் படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்கிலே, ரம்யா கிருஷ்ணன், கிளி அரவிந்தன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கவில்லை.
ஜெயிலர் என பெயரிடப்பட்டிருக்கும் தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் பிரியங்கா மோகன் மற்ற நடிகைகளைப் போல் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விடுவார்.