எண்பதுகளில் ஹீரோவாக கோலிவூடில் காலடி எடுத்து வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மூன்று தலைமுறைகளை கடந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். கமல்ஹாசன், விஜயகாந்துடன் போட்டி போட்டுக்கொண்டு இருந்த ரஜினி இன்று சிவகார்த்திகேயன்,தனுஷ் உடன் தனது படங்களை வெளியிட்டு வெற்றி கண்டு வருகிறார்.
ரஜினி தன்னுடைய நடிப்பினாலும் அவருக்கே தனித்துவமான ஸ்டைலினாலும் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர். தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்யப்படும். ரஜினியுடன் நடிக்க எத்தனையோ நடிகைகள் ஏங்கி கொண்டிருக்க, பிரபல நடிகை ஒருவர் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்து இருக்கிறார்.
ரஜினின் கேரியரில் பில்லா, பாட்ஷா, படையப்பா, அருணாச்சலம், சந்திரமுகி போன்ற முக்கிய மைல் கல்லாக நிறைய படங்கள் இருக்கின்றன. தமிழில் எத்தனை கேங்ஸ்டர் படங்கள் வந்தாலும் அதற்கு முன்னோடியாக இருப்பது ரஜனியின் பில்லா திரைப்படம்தான். இந்த படம் கிட்டத்தட்ட 25வருடங்கள் கழித்து ரீமேக் செய்ய பட்ட போது கூட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது
1980ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சுரேஷ் பாலாஜி தயாரிப்பில் ரிலீசான திரைப்படம் பில்லா, ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, பாலாஜி, மேஜர் சுந்தராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர். 1978ஆம் ஆண்டு பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த டான் படத்தின் தமிழ் ரீமேக் தான் பில்லா.
பில்லா படத்தில் ரஜினிக்கு சமமான கதாபாத்திரம் ஸ்ரீப்ரியாவினுடையது. இந்த கேரக்டரில் முதலில் நடிக்க அணுகியது அப்போதைய ஹீரோயின் ஜெயலலிதாவைத்தான். ஆனால் ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா பின்னாளில் அந்த கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் நடிக்கவில்லை என்று காரணம் கூறினார்.
உண்மையில் மக்கள் திலகம் எம் ஜி ஆர், ஜெயலலிதாவை ரஜினியுடன் சேர்ந்து நடிக்கக்கூடாது என்று கூறிவிட்டார். அதனால் தான் ஜெ பில்லா படத்தில் நடிக்கவில்லை. ரஜினி-எம் ஜி ஆர், ரஜினி-ஜெயலலிதா இவர்களுக்குள் சுமுகமான உறவு இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தனிப்பட்ட வாழ்க்கையை தாண்டி இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தால் பில்லா படம் இன்னுமே அதிக வரவேற்பை பெற்றிருக்கும்.