இயக்குனர் மணிரத்னம் இந்திய சினிமாவில் முதன்மையான இயக்குனர் ஆவார். எந்த ஒரு காட்சியையும் வித்தியாசமான கோணத்தில் அமைப்பது இவருடைய சிறப்பம்சமாகும். மணிரத்னம் இயக்கத்தில் தளபதி , இருவர், நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கின்றன. இவருடைய இயக்கத்தில் வெளியான குரு திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கனவாக இருந்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க நினைத்து பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதே போன்று பல சினிமா பிரபலங்களும் இதை படமாக நினைத்து முயற்சியை கைவிட்டு இருக்கின்றனர். ஆனால் இன்று இயக்குனர் மணிரத்னத்தால் தமிழ் சினிமாவின் கனவு நிஜமாகி இருக்கிறது.
Also Read:கிராமத்து மண் வாசனையுடன் கார்த்தி ஜெயித்த 5 படங்கள்.. குடும்பங்கள் கொண்டாடிய கடைக்குட்டி சிங்கம்
பொன்னியின் செல்வன் என்னும் புத்தகத்தை படமாக திரையில் பார்க்க ஆசைப்பட்ட எத்தனையோ வாசகர்களின் கனவையும் நிறைவேற்றி இருக்கிறார் மணிரத்னம். மேலும் இந்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றியும் பெற்று இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் இந்திய சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டது. இந்திய சினிமா அரங்கிலும் தமிழ் சினிமாவை ஒரு படி மேல் உயர்த்தி விட்டது.
அடுத்து இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் காத்துக்கிடக்கின்றனர். பல சாதனைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் செய்த இயக்குனர், சத்தமே இல்லாமல் இந்த படத்தின் மூலம் ஒரு கதாபாத்திரத்தையே மொத்தமாக க்ளோஸ் பண்ணியும் இருக்கிறார்.
Also Read:அசர வைக்கும் வந்திய தேவனின் சொத்து மதிப்பு.. 25 படங்களில் இவ்வளவு கோடியா?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் மணிரத்னத்தின் கேரக்டர்கள் தேர்வு தான். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் என அழகாக தேர்வு செய்து அதன் மூலமே ரசிகர்களை கவர்ந்தார். நாவலில் ராஜராஜ சோழன் தான் ஹீரோவாக இருந்தாலும் வாசகர்களுக்கு பிடித்தது வந்தியத்தேவன் தான். அதேதான் படத்திலும் நடந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். இனி வந்திய தேவன் என்றாலே கார்த்தியின் முகம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கார்த்தியை வந்தியத்தேவனாக நடிக்க வைத்து இயக்குனர் மணிரத்னம் லோகேஷ் கனகராஜின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வனுக்கு முன்பு வரை கார்த்தி என்றாலே அவர் கைதி படத்தில் நடித்த டில்லி கதாபாத்திரம் தான் எல்லோருக்கும் நினைவு வரும். அந்த அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது கைதி திரைப்படம். அவர் எந்த மேடை ஏறினாலும் கைதி 2 பற்றி தான் ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்பார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு டில்லி என்னும் கேரக்டரையே தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். இப்போது கார்த்தியை எங்கு பார்த்தாலும் வந்தியத்தேவன் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது.
Also Read:சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி