திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உலக நாயகனோடு சம்பவம் செய்ய போகும் விக்னேஷ் சிவன்.. மயிலு மகளை தூக்கிவிடும் கமல்

Actor Kamal Next Project: கமல் எந்த அளவிற்கு அமைதியாக மார்க்கெட் இல்லாமல் இருந்தாரோ தற்பொழுது  படங்கள் நடிப்பது தயாரிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். சிம்பு,  சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் தன் படத்திற்கு விக்னேஷ் சிவனை இயக்குனராக களம் இறக்குகிறார்.

இதில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளார் கமல்.ஏற்கனவே ஸ்ரீதேவியுடன் 80களில் இருந்து ஜோடி போட்ட கமல் தமிழ் சினிமாவிற்கு அவருடைய மகளை கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்.

Also Read: கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கமலுடன் நடிக்க மாட்டேன்

ஜான்விகபூரும் ஹிந்தியில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் தற்போது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடிக்கிறார். இவரை தமிழ் சினிமாவில் பார்ப்பதற்கும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் காமெடி கலந்த லவ் ஸ்டோரியில் தயாராக போகிறது. அதாவது மொபைல் போனில் டைம் டிராவலிங் செய்வதை பற்றிய படம் எடுக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Also Read: 80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

எனவே பல முன்னணி பிரபலங்கள் இணைந்த இந்த டீம் விரைவில் சேரப் போகிறது என்றதுமே பரபரப்பாக பேசப்படுகிறது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளிவரும். முதலில் ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு தான் கிடைத்தது ஆனால் கதையில் ஏற்பட்ட குளறுபடியால் அது இப்போது மகிழ்திருமேனி கைவசம் சென்று விட்டது.

இருப்பினும் அஜித்தை வைத்து இயக்கப் போகிறோம் என்ற  ஆசையில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியில் தோசையை வாயில் வைத்து விட்ட அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்பதற்காகவே விக்னேஷ் சிவன் இந்த  படத்தில் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார்.

Also Read: சுமார் 40 வருடத்திற்கு மேலும் சினிமாவை ஆட்டி படைத்த 6 நடிகர், நடிகைகள்.. எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட கமல்

Trending News