யாருக்கும் தெரியாத மயில்சாமியின் மறுபக்கம்.. மனதை கனக்க வைக்கும் 8 அதிசய குணங்கள்

தன்னுடைய சிறப்பான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த மயில்சாமியின் மரணம் இப்போது ரசிகர்கள் உட்பட அனைவரையும் உலுக்கி இருக்கிறது. நேற்று மாரடைப்பால் உயிரிழந்த அவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களும் நேரில் வந்து மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அது மட்டுமல்லாமல் அவர் எந்த அளவுக்கு ஒரு நல்ல மனிதராக திரையுலகில் வலம் வந்தார் என்ற நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யாருக்கும் தெரியாத மயில்சாமியின் சில குணநலன்களை பற்றி இங்கு காண்போம்.

இயல்பிலேயே பிறருக்கு உதவ வேண்டும் என்ற குணத்துடன் இருக்கும் இவர் கடன் வாங்கியாவது பிறருக்கு உதவி செய்து விடுவாராம். அப்படியும் இல்லை என்றால் தன்னிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தாவது கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து விடுவார். இப்படி ஒரு உயர்ந்த குணத்துடன் இருக்கும் இவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விவேக் ஓபராய் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவி செய்தது பலருக்கும் நினைவில் இருக்கும். அப்பொழுது அந்த விஷயத்தை கேள்விப்பட்ட மயில்சாமி உடனே அந்த இடத்திற்கு சென்று தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி அவரிடம் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டாராம். அந்த அளவுக்கு அவர் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த தங்க செயினில் எம்ஜிஆரின் படம் போட்ட டாலரும் இருந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே எம்ஜிஆர் மீது அதிக பற்று கொண்ட மயில்சாமி அவர் நினைவாக இருந்த தங்கச் செயினையே பிறருக்காக கொடுத்துள்ளார். இது பலரையும் வியக்க வைக்கிறது. அது மட்டும் இல்லாமல் தீவிர சிவபக்தனான இவர் வாரத்திற்கு மூன்று முறையாவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விடுவாராம்.

மேலும் அந்த கோவிலின் கோபுரத்தில் இருக்கும் விளக்கை கூட இவர் கடன் வாங்கி தான் பெற்றுக் கொடுத்தாராம். அதனாலேயே இன்று அவருடைய உடலுக்கு திருவண்ணாமலை கோவிலில் விசேஷமாக பூஜை செய்யப்பட்ட ஒரு மாலை அணிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று திரையுலகினர் அனைவரையும் தன் சொந்த குடும்பமாக நினைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவர் வீட்டு மின் குழம்பு என்றால் கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்களாம்.

இப்படி அனைவருக்கும் நெருங்கிய ஒருவராக இருந்த இவர் ஒரு முறை கூட யாரிடமும் சிபாரிசு என்று சென்றதே கிடையாது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதில் வரும் சம்பளத்தையும் பிறருக்கு கொடுத்த நல்ல மனிதர் தான் இந்த மயில்சாமி. அப்படிப்பட்ட ஒரு மனிதனின் இழப்பு திரையுலகில் ஈடுகட்ட முடியாததாகவே இருக்கிறது. அந்த வகையில் இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் நடிகர்களின் பட்டியலில் மயில்சாமியும் இணைந்துள்ளார்.