முதலில் தனியார் சேனல்களில் முன்னணி ரியாலிட்டி ஷோக்களையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் இயக்கிக் கொண்டு இருந்த நெல்சன் திலீப்குமார் அதன் பிறகு முதல் முதலாக நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதும் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பின் இவருடைய டார்க் காமெடி ஜோனரில் உருவான டாக்டர் படம் 100 கோடி வசூலை அள்ளியதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கும் ரஜினியின் ஜெயிலர் போன்ற பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. இவர் இயக்கிய பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காததால் ரஜினியின் ஜெயிலர் படமே இழுப்பறியில் தான் இவருக்கு கிடைத்திருக்கிறது.
இதனால் இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்ல நெல்சனுக்கும் மிக முக்கியமான படம் என்பதால் பார்த்து பார்த்து நிதானமாக படத்தை உருவாக்கி இருக்கிறார். இவையெல்லாம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவிலேயே கண்கூடாகவே தெரிந்தது. இதனால் ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சன் நல்லதொரு காம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே நெல்சனின் மார்க்கெட் டாப் கீரில் எகிறி விட்டது. டாப் ஹீரோக்கள் படங்களில் அடுத்தடுத்து புக் ஆகி கொண்டு இருக்கிறார். அதாவது மாமனாரின் படத்தை இன்னும் ரிலீஸ் செய்யாமலே மருமகனுக்கு கதை கூற சென்று விட்டார்.
சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார், அந்த கதை பிடித்ததும் அவரும் அதில் நடிக்க உடனே ஒத்துக் கொண்டுள்ளார். இது மட்டுமல்ல கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கும் திட்டத்திலும் நெல்சன் திலிப் குமார் இருக்கிறார்.
முதலில் தனுஷை வைத்து இயக்கும் படத்தை கமலஹாசனை வைத்து தயாரித்துவிட்டு அதன் பிறகு உலக நாயகனின் படத்தை இயக்கும் எண்ணத்தில் நெல்சன் இருக்கிறார். இந்த முறை மிஸ் ஆக கூடாது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்று ஒரு முடிவுடன் இருக்கிறார்.