நடிப்பு மட்டும் இல்லை எங்களுக்கு பாடவும் தெரியும்.. சூப்பர் ஹிட் பாடலை பாடி அசத்திய 5 நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலர் தங்களுக்கு நடிக்கும் மட்டும் அல்ல பாடவும் தெரியும் என தங்களுடைய திறமையை சரியான இடத்தில் வெளிக்காட்டி பாடகர்களாகவும் ரசிகர்களின் மனதில் டாப் 5 கதாநாயகர்கள் இடம் பிடித்திருக்கின்றனர்.

சிம்பு: இயக்குனர் டி ராஜேந்தர் அவர்களின் மூத்த மகனான சிம்பு சிறுவயதிலிருந்து தமிழ் சினிமாவில் பாடகர், நடிகர், நடன ஆசிரியர் என பன்முகம் கொண்ட திறமையானவராக இருப்பதால் அதன் காரணமாகவே எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இவர் இதுவரை 100 படங்களுக்கு மேல் சினிமாவில் பாடி இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.

அதில் சில பாடல் ரசிகர்களை ரிப்பீட் மோடில் இன்றுவரை கேட்க வைக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற சைட் அடிப்போம் என்ற பாடல், கோவில் படத்தில் காதல் பண்ண, குத்து படத்தில் போட்டுத்தாக்கு, மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே, தத்தை தத்தை, வல்லவன் படத்தில் லூசு பெண்ணே, காளை படத்தில் குட்டிபிசாசு, சிலம்பாட்டம் படத்தில் நலம்தானா, மம்பட்டியான் படத்தில் காட்டுவாசி, வானம் படத்தில் எவன்டி உன்ன பெத்தான், போடா போடி படத்தில் லவ் பண்ணலாமா வேணாமா, அப்பன் மவனே. இப்படி இவருடைய குரலில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜய்: தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நாயகனாக விளங்கும் தளபதி விஜய் உடைய அம்மா ஷோபா பாடகர் என்பதால் அவர் சினிமாவில் நுழைந்த போதிலிருந்தே தற்போதுவரை சுமார் 40 பாடல்களுக்கு மேல் பாடி எல்லாப் பாடல்களையும் ஹிட் அடிக்க செய்தவர். ரசிகன் படத்தில் வரும் பம்பாய் சிட்டி என்ற பாடல்தான் இவர் பாடகராக முதன் முதலாக அறிமுகமாகி இவருக்கு இளைய தளபதி என்ற அடைமொழியும் கிடைத்தது.

அதன்பிறகு விஷ்ணு படத்தில் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து தொட்டபெட்டா ரோட்டு மேல என்ற பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கச் செய்தார். பிறகு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை, பெரியண்ணா படத்தில் வந்த நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து, பத்ரி படத்தில் இடம்பெற்ற என்னோட லைலா, தமிழில் படத்தில் உள்ளத்தைக் கிள்ளாதே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து இன்றுவரை அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடலை பாடி ரசிகர்களை திருப்திப்படுத்தி கொண்டிருக்கிறார்.

கமல்: உலக நாயகனாக தமிழ் சினிமாவில் போற்றப்படும் கமலஹாசன் தன்னுடைய 4 வயதில் இருந்தே சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இருக்கிறார். இவர் எழுபதுகளில் இருந்தே பல படங்களில் பாடி வருகிறார். குறிப்பாக கமலின் 100-வது படமான ராஜ பார்வையில் விழியோரத்தில் என கமல் பாடிய சோகப் பாட்டு ரசிகர்களை கலங்கடித் திருக்கும்.

அதன் பிறகு பேர் சொல்லும் பிள்ளை படத்தில் வரும் அம்மா அம்மா வந்ததிங்கு சிங்க குட்டி, தேவர் மகன் படத்தில் சாந்து பொட்டு, இஞ்சி இடுப்பழகி, சிங்காரவேலன் படத்தில் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி இப்படி அதிரடியான பாடல்களை பாடியது மட்டுமல்லாமல், மென்மையான தனது குரலில் ‘உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது’ என்று டூயட் பாடலும் பாடி இருக்கிறார். மேலும் இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அத்துடன் சமீபத்தில் விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை தன்னுடைய கரகர குரலில் பாடி அசத்தியிருப்பார்.

சிவகார்த்திகேயன்: மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அதன் பிறகு தொகுப்பாளராகவும் தற்போது முன்னணி நடிகராகவும் வளர்ந்த சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் பாடிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற பாடல், ரஜினிமுருகன் படத்தில் ‘ரஜினிமுருகன்’, மாப்பிள்ளை சிங்கம் படத்தில் இடம்பெற்ற ‘எதுக்கு மச்சான் காதலு’, லிப்ட் படத்தில் இடம்பெற்ற ‘இன்ன மயிலு’ போன்ற பாடல்கள் சிவகார்த்திகேயனின் குரலில் இளைஞர்களை ரிப்பீட் மோடில் கேட்க செய்தது.

தனுஷ்: தற்போது கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என வேற ரேஞ்சில் கொடி கட்டி பறக்கும் தனுஷ், நடிப்பது மட்டுமல்லாமல் அவருடைய குரலில் பாடிய பாடல்கள் அனைத்தும் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகிறது. இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி, ரவுடி பேபி, காதல் என் காதல் போன்ற பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்ற பாடல்களாக பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. அதுவும் தனுஷ் மற்றும் அனிருத் காம்போ-வில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் வகையில் இருக்கிறது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் 60, 70-களில் இருந்த நடிகர்கள் நடிப்பதுடன் அவர்களே வசனம் எழுதுவது, டயலாக் பேசுவது, பாடுவது, இசையமைப்பது என அனைத்துத் திறமைகளையும் உடையவர்களாக இருந்ததுபோல் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் இந்த ஐந்து கதாநாயகர்களும் நடிப்பு மட்டும் இல்லை எங்களுக்கு பாடவும் தெரியும் என பாடி அசத்துகின்றனர்.