மார்க்கெட் இல்லாத நடிகைகளை டார்கெட் செய்யும் கமல்.. 5 பேரை அசால்டாக வாரித்துன்ன உலக நாயகன்

சினிமாவை பொருத்தவரை கமலுடைய படங்களும் நடிப்பும் இப்படித்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக மக்களிடம் முத்திரை பதித்து விட்டார். அதிலும் அந்தப் படங்கள் எனக்கு லாபத்தை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என் காலத்திற்குப் பிறகும் அந்த படங்கள் நின்னு பேசும் என்று தைரியமாக படங்களுக்கு படங்கள் வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார்.

அதனாலயே எத்தனையோ படங்களில் தோல்வியை பார்த்து கொஞ்சம் இருக்கும் இடம் தெரியாமலும் போயிருந்திருக்கிறார். ஆனால் அதை எதையுமே கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவருக்கு பிடித்ததை மட்டுமே செய்து வந்திருக்கிறார்.

அதனால்தான் என்னமோ யாராவது துவண்டு போய் இருந்தால் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறார். அந்த வரிசையில் மார்க்கெட் இல்லாமல் சரிந்திருந்த நடிகைகளை டார்கெட் செய்து அவர்களுக்கு மறுபடியும் சினிமாவில் திருப்புமுனையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அந்த நடிகைகள் யார் என்று பார்க்கலாம்.

அதாவது ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வந்த த்ரிஷா தமிழில் அதிக வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அப்பொழுது இவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக கமல், திரிஷாவை மன்மதன் அம்பு படத்திற்கு கூப்பிட்டு அவருக்கு அம்பு விடும் விதமாக வாய்ப்பை கொடுத்துவிட்டார்.

அடுத்ததாக ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெருசாக யாருக்கும் தெரியாத அளவிற்கு தான் இவர் இருந்தார். அப்பொழுது தசாவதாரம் படத்தில் ஒரு வாய்ப்பை கொடுத்து இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டார். அடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிம்ரன் இவர்கள் இருவருக்கும் பஞ்சதந்திரம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து மார்க்கெட் இல்லாமல் துவண்டு இருந்த இவர்களை தூக்கி விட்டார்.

இதனை அடுத்து கன்னட நடிகை ஜெயசுதா அவரையும் கை தூக்கி விடும் விதமாக கமல் கன்னட படத்தில் நடிக்கும் போது இவருக்கு கெஸ்ட் ரோல் வாய்ப்பை கொடுத்து மார்க்கெட்டை ஏத்தி விட்டார். இப்படி ஐந்து நடிகையை அசால்ட் ஆக சினிமாவில் அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறார்.