தக்லைஃப் கிட்டத்தட்ட 200 கோடிகள் பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா என ஒரு நம்பிக்கை கூட்டணி போட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
தக்லைஃப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்த படம் அவர்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளது. கமல் தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருப்பதால் இந்த படம் நஷ்டம் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளித்து விடுவார்கள். பெரிய சம்பளம் வாங்கும் கமல் இதில் நிறைய அட்ஜஸ்ட்மென்ட் செய்திருப்பார்.
இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் ஓரளவு நார்மலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 200 கோடிகள் என்பது படத்தின் ப்ரோமோஷன், ஆர்ட்டிஸ்ட்களின் சம்பளம், இதர செலவுகள் என எப்படி பார்த்தாலும் 220 கோடிகள் வரை பதம் பார்த்திருக்கும்.
ஆரம்பத்திலிருந்து கமல் மற்றும் மணிரத்தினம் இந்த படத்தின் வியாபாரத்திலேயே குறியாக இருந்தார்கள். அதன் ஒரு கட்டமாக இந்த படத்தை 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடி யில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கமல் இதை வாங்கிய நெட் பிலிக்ஸ் தளத்திற்கு கட்டளை போட்டிருந்தார்.
நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் கமல் சொன்ன காலத்திற்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது . இந்த படத்தை இவர்கள் 150 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். அது போக இதன் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி 60 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இதிலேயே இந்த படம் லாபகரமாக அமைந்து 210 கோடிகள் வசூலித்து விட்டது. இன்னும் தியேட்டர் வசூல் 30 கோடியை சேர்த்தால் அவர்களுக்கு பிராஃபிட் தான்.