படு மொக்கை போட்ட சன் டிவி.. இதுக்கு அவங்கள போட்டு இருந்தா மானம் போயிருக்காது நெல்சா!

கடந்த 2012 ஆம் ஆண்டு சன் டிவி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தளபதி விஜய் பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் விஜய் முதல் முதலாக நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான நேர்காணலில் பங்கேற்றார். இதற்கு என்ன காரணம் என பலரும் சோஷியல் மீடியாவில் கிசுகிசுத்தனர்.

இருப்பினும் அந்த நேர்காணலில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்க, விஜய் பதில் அளிப்பதை பார்ப்பதற்காகவே நேற்று இரவு மக்கள் அனைவரும் வேலைகளை முடித்துவிட்டு சன் டிவி முன் தவம் கிடந்த நேரம், விஜயின் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்த கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு விஜய் மற்றும் நெல்சனின் நேருக்குநேர் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என நினைத்தனர்.

ஆனால் எதிர்பார்த்த மக்களுக்கு நேருக்கு நேர் நிகழ்ச்சி பெரும் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. விஜய் மற்றும் நெல்சன் இருவரும் அந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மொக்கை போட்டு விட்டனர். இருவரும் புரோகிராமில் பேசியதே சரியாக கேட்கவில்லை .

வாய்க்குள்ளேயே முனங்கி முனங்கிபேசியதால் மக்களுக்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அதன்பின் கேட்ட கேள்விகளும் மொக்கை கேள்வியாக இருந்தது. இதனால் நிகழ்ச்சி படு போர் ஆக சென்றது.  இந்த நிகழ்ச்சிக்கு நெல்சனை தவிர வேறு யாரையாவது காம்பியரிங் செய்ய சொல்லி இருக்கலாம்.

பொதுவாக பிரபலங்களை பேட்டி எடுக்கும் வேலையை சிறப்பாக செய்யும் தொகுப்பாளர்கள் யாரையாவது சன் டிவி தேர்வு செய்திருக்கலாம். அதாவது திவ்யதர்ஷினி(DD), அர்ச்சனா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தால் வேற லெவல் இருந்திருக்கும் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தில் கூறிவருகின்றனர்.

ஆகையால் இந்த நேர்காணல் பில்டப் காட்டிய அளவுக்கு எந்த ஒரு புதுமையையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டட் போல இருந்தது இந்த புரோகிராம். பொதுவாக விஜய் படங்கள் அனைத்திற்கும் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அதிலும் சில ரசிகர்கள் ஒரு மணி நேரம் கூட தாங்கல, இதுல இரண்டரை மணி நேர படம் எப்படி இருக்குமோ என்ற பயத்தை காட்டியுள்ளார் நெல்சன்.

எனவே வரும் ஏப்ரல் 13-ம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கி தளபதி விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு சிலர் காரணத்தால் நடத்த முடியாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை மகிழ்விக்க இந்த நேர்காணலில் விஜய் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் அதை இன்னும் கொஞ்சம் சரியாக செய்திருக்கலாம் என தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் அடிக்கின்றனர்.