SIIMA அவார்ட்ஸ் 2022.. முக்கிய விருதுகளை தட்டி தூக்கிய படங்கள், நடிகர், நடிகைகளின் லிஸ்ட்

SIIMA அவார்ட்ஸ் பத்தாவது ஆண்டிற்கான விருது விழா கடந்த சனி மற்றும் ஞாற்றுக்கிழமை நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டது. மேலும் கௌரவ விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதிக நாமினேஷனில் புஷ்பா திரைப்படம் இருந்தது. மொத்தம் 12 கேட்டகரிகளில் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மூன்று கேட்டகரிகளில் நாமினேஷன் செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ், மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு, டோவினோ தாமஸின் மின்னல் முரளி அதிகமான விருதுகளை வாங்கியது. சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரணாவத்துக்கு தலைவி படத்திற்காக கொடுக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஜூரி விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகனுக்கான விருது சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததற்காக ஆர்யாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் ஜூரி அவார்ட் சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகருக்கான விருது சிம்புவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த படத்திற்கான விருது சர்பேட்டா பரம்பரை திரைப்படத்திற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது லோகேஷ் கனகராஜ்க்கும், சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ப்ரியங்கா மோகனுக்கும் வழங்கப்பட்டது. டாக்டர் திரைப்படத்திற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நெகடிவ் ரோலுக்கான விருது நடிகர் மற்றும் இயக்குனர் SJ சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகருக்கான விருது ரெடின் கிங்ஸ்லிக்கும், சிறந்த காமெடி நடிகைக்கான விருது தீபாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த சப்போர்டிங் கேரக்டருக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இவர் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சிறந்த பாடகிக்கான விருது தீ க்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருது கபில் கபிலனுக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ஷ்ரேயாஸ் கிருஷ்ணாக்கு வழங்கப்பட்டது.