கோலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மற்றும் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது சன் பிக்சர் நிறுவனத்தின் வசம் நான்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் இருக்கின்றன.
ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். ஜெய்லர் படத்தின் மொத்த பட்ஜெட் 175 கோடியாகும். இந்தப் படம் பிரம்மாண்ட அளவில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.
விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி.
தனுஷ்: நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்திற்காக சன் பிக்சர்ஸ் உடன் இணைகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி. தனுஷ் இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் அவரின் சம்பளம் மட்டுமே 35 கோடி.
சிவகார்த்திகேயன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்களை கொடுத்தவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் தோல்வி படங்களும் அடங்கும். சிவா தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை வைத்தும் ஒரு படம் பண்ண இருக்கிறார்கள். இந்தப் படத்தின் பட்ஜெட் 50 கோடி.
சன் பிக்சர்ஸ் வரிசையாக அடுத்தடுத்து ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ண இருக்கிறார்கள். அத்தனை படங்களுமே கோடி கணக்கில் உருவாகும் பட்ஜெட் தான். அடுத்த ஐந்து வருடத்திற்கு கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களை தன்வசம் கொண்டு வந்துவிட்டது சன் பிக்சர்ஸ்.