எல்லா படங்களிலும் இளசுகளை மயக்க மணிரத்தினம் வைக்கும் ஒரே வசனம்.. ஹீரோக்களை குத்திக் கிழிக்கும் ஹீரோயின்

மணிரத்தினம் தனது படங்களில் வசனங்களுக்கு மிகவும் மெனக்கிடுவார். அதனால் தான் அவரது படங்கள் காதல் ரசத்துடன் காலத்தால் அழியாமல் இளசுகள் கொண்டாடி வருகிறார்கள். அவ்வாறு தளபதி, நாயகன் என தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் வரை அவரது படங்களில் ஏகப்பட்ட வசனங்கள் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது.

தளபதி படத்தில் நட்புனா என்னனு தெரியுமா நண்பன்னா என்னன்னு தெரியுமா, ஏன்னா நீ என் நண்பன், தேவா சாகக்கூடாது என ரஜினி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அதேபோல் நாயகன் படத்தை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை நாலு பேரு சாப்பிட உதவனும்னா எதுவுமே தப்பில்ல, நீங்க நல்லவரா கெட்டவரா என்ற வசனமும் இப்போதும் பிரபலம்.

இதே படத்தில் கமலிடம் ஜனகராஜ் இனிமே அப்படிதான் என்ற சொல்லும் வார்த்தையை யாராலும் மறக்க முடியாது. அலைபாயுதே படத்திலும் நிறைய காதல் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் படத்தில் ஹீரோயினுக்கென்றே தனி வசனம் மணிரத்தினம் வைத்திருப்பார்.

அதாவது மணிரத்னம் படங்களில் ஹீரோ, ஹீரோயின் இடம் உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற வசனத்தை கூறுவார்கள். உடனே அவர்களை சாக சொல்லும் வசனத்தை வைத்திருப்பார் மணிரத்தினம். இது மணிரத்தினத்தில் இரண்டு, மூன்று படங்களில் இதே வசனம் இடம் பெற்றிருக்கும்.

அதாவது அலைபாயுதே படத்தில் மாதவனிடம் ஷாலினி இதே வார்த்தையை சொல்லி இருப்பார். மேலும் இப்போது வசூலில் பட்டையை கிளப்பி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா வந்தியதேவனான கார்த்தியிடம் சாகச் சொல்வார்.

இவ்வாறு ஹீரோக்களை குத்தி கிழிக்கும் இந்த வார்த்தை தொடர்ந்து மணிரத்தினம் படத்தில் இடம்பெற்று வருகிறது. மேலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதிலும் கண்டிப்பாக ரசிகர்களை வருடும் வசனங்கள் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.