துணை கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. அதன் பின் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் டாப் ஹீரோயின் பட்டியலில் இடம்பெற்றதால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து இவரின் அடுத்த கட்ட 5 பெரிய படங்களை பற்றி இங்கு காணலாம்.
லியோ: கில்லி, திருப்பாச்சி, கத்தி, குருவி போன்ற படங்களில் விஜய் உடன் ஜோடியாக நடித்தவர் திரிஷா. அதன் பின் 14 வருடம் கழித்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படமான லியோ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை கொண்டு வரும் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என நம்பப்படுகிறது.
விடாமுயற்சி: மகிழ் திருமேனியின் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கும் படம் தான் விடாமுயற்சி. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக யாரை போடலாம் என பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அதன் பின்னர் தற்போது மார்க்கெட்டில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வரும் திரிஷாவை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். இப் பட வாய்ப்பையும் திரிஷா ஏற்பதாக முடிவு எடுத்து வருகிறார்.
கமல் 234: மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் கே ஹெச்234. படப்பிடிப்பு பற்றிய தகவல் எதுவும் வெளிவராத நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷாவை நடிக்க வைப்பதாக முடிவு எடுத்து உள்ளார்களாம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படமான மன்மதன் அன்பு, தூங்காவனம் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்த நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வருகிறது.
தனுஷ் 50: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் தனுஷ் டி 50. இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு வந்துள்ள நிலையில் படத்தின் ஹீரோயின் த்ரிஷாவாக இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
திரிஷா 68: கௌரவ் நாராயணன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார் திரிஷா. தற்பொழுது லியோ படத்தில் பிசியாக இருக்கும் திரிஷாவிடம் ஒப்பந்தம் பெற்ற இயக்குனர் இக்கதை குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் இப்படத்தை ஜூலை மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.